பெர்சியன் வளைகுடாவில் போர்க்கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை
ஈரான் அமெரிக்க பிரச்சனை காரணமாக பெர்சியன் வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா களமிறக்கியுள்ளது.
இந்திய கடற்படை ஆபரேஷன் சங்கல்ப் என்ற நடவடிக்கையை பாரசீக வளைகுடா பகுதியில் தொடங்கியது.
தற்போது அங்கே நிலவும் பதட்டமான சூழல் நமது வர்த்தக கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை பாதிக்காமல் இருக்கும் வகையில் ஐ.என்.எஸ். சென்னை அதீநவீன நாசகாரி கப்பல் மற்றும ஐ.என்.எஸ். சுனைனா ஆகிய கப்பல்கள் அந்த பகுதிக்கு அனுப்பபட்டுள்ளன.
அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக அறிவித்த பிறகு இந்த நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தியுள்ளது.
சென்னை,சுனன்யா போர்க்கப்பல்களை தவிர்த்து வான் வழி கண்காணிப்பிற்காக கடற்படை விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
சென்னை இந்திய கடற்படையின் சக்திமிக்க அதிநவீன நாசகார போர்க்கப்பல் ஆகும்.