இந்தியாவின் ஆயுத தளவாட ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புத்துறை ஆயுத உற்பத்தி இணை இயக்குநர் சஞ்சய் சாஜூ, கடந்த நிதியாண்டில் 4682 கோடி ரூபாயாக இருந்த ஆயுத தளவாட ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 10,745 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.
அடுத்த சில மாதங்களில் புதிய ஏற்றுமதி கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளதால், ஆயுத தளவாட ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார். தற்போது 5000 கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்காவுக்கும், இதனையடுத்து இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
புதிய ஏற்றுமதி கொள்கை அமலுக்கு வந்தால், மேலும் பல நாடுகளை அடையாளம் கண்டு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.