கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய ராணுவ அதிகாரி

கோவாவின் தெற்கு பகுதியில், கடலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம் ராணுவ அதிகாரி ஒருவரை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
திரைப்படக் காட்சியை மிஞ்சும் இந்த சாகசம் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடல் கொந்தளிப்பு,மழை என இயற்கை இடர்களுக்கு நடுவே போராடி ராணுவ அதிகாரியை கடலோர காவல்படை மீட்டுள்ளது. கடற்கரை பாறைகளில் நடந்த போது கால் இடறி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த ராணுவ அதிகாரி, கடல் அலைகளுக்கு நடுவே உயிருக்குப் போராடுவதைக் கண்ட பாதுகாப்பு வீரர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கடலோர படையின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கடலில் தத்தளித்த அதிகாரி பத்தே நிமிடங்களில் உயிருடன் மீட்கப்பட்டார். 
மீட்கப்பட்ட அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.