இந்தியாவிடம் அமெரிக்க அரசு மீண்டும் வலியுறுத்தல்

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் இந்தியாவை வலியுறுத்தி உள்ளது.

சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஸ்400 என்ற 5 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எஸ்400 ஏவுகணைகளுக்குப் பதில் மாற்று ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற இதுவே சரியான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் காட்சா (( caatsa))சட்டப்படி பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அடுத்த வாரம் இந்தியா வர இருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இருதரப்பிலும் பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.