ரம்சான் பண்டிகையை இனிப்பு வழங்கி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

ரம்சான் பண்டியையொட்டி, எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நாடு முழுவதும் இன்று ரம்சான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவத்தினர், இந்திய- வங்கதேச எல்லை பகுதியான புல்பாரியில் வங்கதேச ராணுவ வீரர்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல், இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி -வாகாவில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை வழங்கியும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் ரம்சான் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.