ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.