அருணாச்சலப்பிரதேசத்தில் 13 பேருடன் மாயமான ஏ.என்.32 போர் விமானத்தைத் தேடும் பணி, மோசமான வானிலையால் தொய்வடைந்துள்ளது.
அருணாச்சலப்பிரதேசம் மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்ற அந்த விமானம் திங்களன்று மாயமானது. அதைத் தேடும் பணியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அரக்கோணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து P-8I போர் விமானமும் புறப்பட்டுச் சென்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. மூன்றாவது நாளாக தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர், மலையேறிச் சென்று ஏஎன்32 விமானத்தைத் தேடி வருகின்றனர்.