8 மாவட்டங்கள்; 19,000 பேருக்கு அழைப்பு – ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் தமிழக இளைஞர்கள்

8 மாவட்டங்கள்; 19,000 பேருக்கு அழைப்பு – ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் தமிழக இளைஞர்கள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று முதல் ராணுவத்திற்கான ஆள் தேர்வு நடந்து வருகிறது. இதற்காக 8 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கடலூரில் குவிந்துள்ளனர்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்த தேர்வில் கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகில் உள்ள  விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் என 19 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. தினம் 2500 பேர் வீதம் தேர்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2180 பேருக்கு மார்பளவு, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உட்படப் பல உடல் தேர்வு நடந்தது.
முகாமிற்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகளும் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கம்யூட்டர் மூலம் வெளிப்படையான ஆள் தேர்வு நடைபெறுவதால்  இடைத்தரகர்களை  நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.