Breaking News

கேப்டன் சௌரப் காலியா-உறுதியின் உச்சம்

கேப்டன் சௌரப் காலியா-உறுதியின் உச்சம்
பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை அறிய இந்தியா இராணுவம் கேப்டன் காலியா தலைமையில் 5 துருப்புகள் நிலைமையை அறிய அனுப்பி வைத்தது.
1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது அந்த ஆண்டு மே மாதம் 15–ந்தேதி கஸ்கார் பகுதியில் இந்திய ராணுவ கேப்டன் சவுரவ் காலியாவும், 4 சிப்பாய்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சவுரவ் காலியா உள்ளிட்ட 5 பேரையும் சிறைபிடித்துச் சென்று அவர்களை கடுமையாக சித்ரவதை செய்து கொன்றனர். 15 நாட்களுக்கு பின்பு, அவர்களுடைய உடலை இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தபோது 5 பேரின் உடல்களும் சிதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கேப்டன் சவுரவ் காலியாவின் காதுக்குள் இரும்பு கம்பியை நுழைத்தும், அவருடைய கை,
கால்கள் மற்றும் மர்ம உறுப்பை துண்டித்தும் சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.
இன்று வரை அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்.
மே,1999 ல் கார்கிலில் உள்ள கஸ்கர் லங்பா பகுதியில் உள்ள நிலையை அறிய பல முறை ரோந்து நடைபெற்றது.காலியா தான் ஊடுருவலைப் பற்றி முழுமையான அறிக்கையை தயார் செய்தார்.பாகிஸ்தான் பஜ்ரங் போஸ்டில் கிட்டத்தட்ட 13,000-14,000 வரை ஊடுருவியிருந்தது எனக் கண்டார்.
15, மே 1999 ல் 4வது ஜாட் ரெஜிமெண்டை சேர்ந்த காலியா மற்றும் அர்ஜீன் ராம், பன்வர் லால் பவாரியா, பிகா ராம், மூலா ராம் ,நரேஷ் சிங் ஆகிய நான்கு வீரர்களும் மரங்களில்லாத கரடுமுரடான லடாக்கின் காஸ்கர் செக்டரின் பஜ்ரங் போஸ்டில் எப்போதும் போல ரோந்து சென்றனர்.
அப்போது தீடீரென பாகிஸ்தான் வீரர்கள் தாக்க தொடங்கினர்.பதிலடி கொடுக்க தயாரான காலியா மற்றும் நான்கு வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த தோட்டாக்கள் முடியும் வரை போராடினர்.
தோட்டக்களின் ஓசை நின்றதை அறிந்த எதிரி படை காலியா மற்றும் குழுவினரை சூழ்ந்தது.நம் படை வரும் முன்னரே பாகிஸ்தானின் ஒரு பிளாட்டூன் காலியா மற்றும் அவரது வீரர்களை உயிருடன் பிடித்து சென்றனர்.
தேடிச் சென்ற வீரர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.பாகிஸ்தானின் ரேடியோ “தாங்கள் காலியா மற்றும் அவரது குழுவினரை பிடித்து வைத்துள்ளோம்” என அறிவித்தது.தேடிச் சென்ற இராணுவத்தினர் கண்ணில் எதிரி நாட்டு கெரில்லா படை கண்ணில் பட்டது.அவர்கள் நம் நாட்டின் எல்லையினுள் உள்ள மலைப்பகுதிகளின் மேல் பகுதியில் இருந்தனர்.இவர்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் ஆயுதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
22 நாட்களுக்கு பின்,அதாவது 7 ஜீன் அன்று காலியா மற்றும் அவரது வீரர்களின் உடலை பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிடம் அளித்தது.
உடலெங்கும் வெட்டுக் காயங்கள்,காதுகளில் இருப்பு ராடுகள் நுழைக்கப்பட்டு,உடல் தீயால் சுடப்பட்டு,சிகரெட்டால் சுட்ட வடுக்கள்,கண்களை குத்தி துளையிட்டு,பின் கண்களை பறித்து, எலும்பு,பற்கள் உடைக்கப்பட்டு,மண்டை ஓடு நொறுக்கப்பட்டு,உதடுகள் வெட்டப்பட்டு,மூக்கு அறுக்கப்பட்டு,அந்தரங்க பகுதிகள் சேதம் செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கடைசியாக சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
வீரவணக்கம் என் சகோதரர்களே!
இந்தியாவிற்காக தன் உயிரை மாய்த்த அந்த 5 வீரர்களுக்கும் வீரவணக்கம்
சிபாய் மூலா ராம்
சிபாய் பிகா ராம் மூந்த்
சிபாய் அர்ஜீன் சிங்
சிபாய் நரேஷ் சிங்
சிபாய் பன்வாரி லால்

Leave a Reply

Your email address will not be published.