சந்திரயான்-2 : முதல் போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ!

இஸ்ரோவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 திட்டத்தை ஜூலை மாதம் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 திட்டத்தை ஜூலை மாதம் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், சந்திரயானை விண்ணுக்கு சுமந்து செல்லும் ராக்கெட்டின் முதல் போட்டோவை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. 
சந்திரயான்-2 அமைப்பை உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 விண்ணிற்கு சுமந்து சென்று செயல்படுத்த உள்ளது. இதில் மூன்று வகையிலான அமைப்புகள் உள்ளன. இந்த ராக்கெட்டில் முதல் அமைப்பு சந்திரயான்-2 ஐ சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும், அடுத்தக்கட்டமாக லேண்டர் எனப்படும் அமைப்பு நிலவில் சந்தியான்-2 தரையிறக்கும். 3வது ரோவர் எனப்படும் ஆய்வுக் கலமான பிரக்யான்.
இஸ்ரோ தகவலின்படி ஆர்பிட்டர் அமைப்பு முதலில் சந்திரயான்-2 சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் என்றும், பின்னர் அங்கிருந்து நிலவின் தெற்கு எல்லைப் பகுதியில் தரையிறக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. பின்னர் ஆறு சக்கரங்களைக் கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.