மிக்-29 விபத்து -விமான நிலைய ஓடு பாதையில் பற்றியெறிந்த நெருப்பு
கோவா விமான நிலையத்தில் மிக்-29 போர் விமானம் ஒன்றில் இருந்து எரிபொருள் டாங்க் விழுந்து தீப்பிடித்ததையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.பனாஜி விமான நிலையத்தில் இருந்து ராணுவத் தேவைக்காக போர் விமானங்கள் அவ்வப்போது எரிபொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம் .
இந்நிலையில் சனிக்கிழமை அன்று புறப்பட்ட போர் விமானம் ஒன்றில் இருந்து எரிபொருள் டாங்க் ஒன்று விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்தது.
இதனால் விமான நிலையம் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் மூடப்பட்டது. நிலைமை சீரடைந்து விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.