உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 75 வது டி-டே நினைவு தின நிகழ்ச்சி இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ் மவுத்தில் அனுசரிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தினமாக டி-டே தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 75வது டி-டே தின நிகழ்ச்சியானது இங்கிலாந்தின் தெற்கு பகுதியிலுள்ள போர்ட்ஸ் மவுத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 3 நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார்.
வீரர்களின் அணிவகுப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில், 2ம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.