மேலும் 10 பி-8ஐ விமானங்கள் வாங்க கடற்படை திட்டம்

மேலும் 10 பி-8ஐ விமானங்கள் வாங்க கடற்படை திட்டம்

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து மேலும் 10 பி-8I நீர்மூழ்கி எதிர்ப்பு வாங்க உள்ளது.இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க செக்கரட்டரி மைக் போம்பே அவர்களின் இந்திய பயணத்தின் போது கையெழுத்தாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு,உளவு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு பணிகளுக்காக பி-8ஐ வாங்கப்பட உள்ளது.இதற்காக ஒப்பந்தத்திற்கு இராஜ்நாத் அவர்கள் தலைமையிலான தளவாடக் கொள்முதல் அமைப்பு கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

 Foreign Military Sales (FMS) route வழியாக இந்த ஒப்பந்தம் நிகழ உள்ளது.இந்த மாத இறுதியில் இதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வாங்கும் திட்டம் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.இது ஒரு பிரச்சனையாக கருதலாம்.எனினும் முன்பை விட இந்தியா அமெரிக்கா உறவு மேம்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.