தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படை தளபதியாக, இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினேகரை ஐ.நா. சபை நியமித்துள்ளது.
சூடான் நாட்டின் தெற்கு பிராந்தியத்தின் அமைதிப் படைக்கு தளபதியாக இருந்த ருவாண்டாவைச் சேர்ந்த பிராங் கமன்ஸி (Frank Kamanzi)-யின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதை அடுத்து தெற்கு சூடானுக்கான அமைதிப் படையின் புதிய தளபதியாக இந்திய ராணுவ அதிகாரியான சைலேஷ் தினகரை ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனிடா குட்டெரஸ் நியமித்துள்ளார்.
லெப்டினண்ட் ஜெனரலான சைலேஷ் தினகர், ராணுவப் பயிற்சி பள்ளியின் தளபதியாகவும், ராணுவ செயல்பாடுகளுக்கான கூடுதல் பொது இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், அவர் 1996, 1997-ஆம் ஆண்டுகளில் அங்கோலாவிலும், 2008, 2009-ஆம் ஆண்டுகளில் சூடானிலும் ஐ.நா. அமைதிப் படையில் பொறுப்புகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.