ஜோர்ஜியா நாட்டு விமானத்தை சிறைப்படுத்திய சுகாய் விமானங்கள்

ஜோர்ஜியா நாட்டு விமானத்தை சிறைப்படுத்திய சுகாய் விமானங்கள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த An 12 சரக்கு விமானத்தை இடை மறித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது விமானப்படையை சேர்ந்த சுகாய் விமானங்கள்.

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ஜார்ஜியா நாட்டுக்கு சொந்தமான An 12 என்ற சரக்கு விமானம் டெல்லி வர இந்திய வான் கட்டுப்பாடு அமைப்பிடம் கேட்டிருந்தது, ஆனால் வான் கட்டுப்பாடு அமைப்பு கொடுத்த வழி வராமல் குஜராத் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்தது,

விமானத்தின் போக்கை கண்ட இந்திய விமானப்படை, அந்த சரக்கு விமானத்தை இடை மறிக்க தனது வான் பாதுகாப்பு விமானங்களை உடனடியாக அனுப்பியது.இதற்கென பறந்த சுகாய் விமானங்கள் அந்த ஏஎன்12 விமானத்தை வழிமறித்து ஜோத்புர் விமான நிலையத்தில் தரை இறங்க வைத்தது,

An 12 விமானத்தின் விமானிகளிடம் இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.