Breaking News

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா
1999 கார்கில் போரின்போது பாக் இராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா இந்திய இராணுவ வான் படையின் தாக்கு விமானத்தின் விமானி ஆவார்.
அஜய் அகுஜா ராஜஸ்தானின் உள்ள கோட்டாவில் பிறந்தார்.அவர் அங்குள்ள புகழ்வாய்ந்த புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார்.பின்பு அவர் தேசிய பாதுகாப்பு கழகத்தில் பட்டம் பெற்று 14 ஜூன்,1985ல் இந்திய வான் படையில் தாக்கு விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார்.
தாக்கு விமானத்தின் விமானியாக மிக்-23 மற்றும் மிக் -21 போன்ற விமானங்களில் பயனித்தவர்.
அதுமட்டுமல்லாமல் 1000 மணி நேர பயண அணுபவம் கொண்டவர். 1997ல் அவர் பஞ்சாப்பில் உள்ள கில்லி பைசியானா விமான தளத்திற்கு அனுப்பட்டார்.1999 மே மாத்தில் கார்கில் போர் ஆரம்பத்த போது 17 வது கோல்டன் ஏரோஸ் ஃபிளைட் கமாண்டராக நியமிக்கப்பட்டார். மே 27 ல் சஃபீட் சாகர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் புகைப்பட உளவு பார்க்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.
அப்பொழுது திட்டக்குழு உறுப்பினர், ஃபிளைட் லெட். நச்சிகேட்டா விமானத்தில் தீ பிடித்ததின் காரணமாக அவர் இயக்கிய விமானமான மிக்-27Lல் இருந்து வெளியேறினார். ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜாவோ அவரை காக்கும் நோக்கோடு பாகிஸ்தான் படைகள் தரையிலிருந்து வான் தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆபத்தையும் உணர்ந்தும் அவரின் மிக்-21MF விமானம் மூலம் அவரை காப்பாற்ற சென்றார்.
துரதிர்ஷ்டவசமாக அவரின் விமானம் எதிரிகளால் தாக்கப்பட்டது. அகுஜா ரேடியோ அழைப்பு கொடுத்தார்-“ஹெர்குலிஸ், என்னுடைய விமானம் ஏதோ ஒன்றால் தாக்கப்பட்டது; நான் விமானத்தில் இருந்து வெளியேறுகிறேன்” என ரேடியோவில் கூறினார்.இந்திய விமானப் படையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்திய வான் படையால் வெளியிடப்பட்ட தகவலின் படி அவரின் விமானமானது இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்தான் இருந்தது என்றும் மற்றும் ஸ்ரீநகர் தள மருத்துவனையில் செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையின்படி அவர் பத்திரமாக தரையிரங்கிய பின் பாக் படைவீர்களால் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அகுஜாவின் உடற்கூறாய்வு அறிக்கை மரணத்திற்கு வழிவகுக்கும் மூன்று பெருங்காயங்கள் பற்றி பேசுகிறது.
அவரின்
இடது முழங்கால் காயமும் குண்டு துளைத்தற்கான அடையாளமும், அவர் உயிரோடு தரையிறங்கிய பின்னரே சுட்டு கொல்லப்பட்டார் என்பதை காண்பிக்கின்றன.ஜீன் 15 ல் பாக் தூதரக ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு போரின்போது கைது செய்யப்பட்ட போர் கைதிகளை துன்புறுத்தி கொன்றது தொடர்பான ஜெனிவா போர் மரபு மீறல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா அஜய் பாரசூட்டில் இருந்து இறங்கும்பொழுதே பாக் பாரமிலிடரி படையால் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் பாக் உயரதிகாரிகள் இதனை மறுத்து அவர் விபத்தில்தான் மரணித்தார் என்றனர்.அதன்பிறகு எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அவர் மரணம் பற்றிய சந்தேக முடுச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. மே 29 ல் அவரின் உடல் லோக்கல் வான் படை மையத்திற்கு கொண்டுவரப்பட்டு  தகனம் செய்யப்பட்டது. இன்றும் அவர் இந்திய மக்களின் மகத்தான நாயகனாக விளங்குகிறார் மற்றும் அவரது குடும்பம் ஒவ்வொரு தேசிய நிகழ்விலும் மரியாதைக்குட்படுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 15, 1999 இந்திய சுதந்திரதின விழாவில் ஸகுவாட்ரன் தலைவர் அஜய் அகுஜாவுக்கு இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான வீர சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.