நடுவானில் பயணிக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறங்கிய விமானம்; உதவிய விமானப் படை

பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டத்தை அடுத்து அவசர சிகிச்சைக்காக ஜாம்நகர் இந்திய விமானப்படைத் தளத்தில் இந்திய விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து மஸ்கட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாம்நகர் விமானப்படை தளத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பின்னர், நோயாளியை ஒரு இந்திய விமானப் படையைச் சேர்ந்த மருத்துவர் ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து குஜராத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் புனீத் சந்தா நேற்று இரவு ட்வீட்டரில் பதிவிட்டிருந்த விவரம்:

”33 வயது மதிக்கத்தக்க இந்திய பயணி மாரடைப்பில் அவதிப்பட்டதை அடுத்து ஏஐ 973 டெல்லி மஸ்கட் விமானம் ஜாம்நகர் விமானப் படைத் தளத்திற்கு இரவு 22.30 மணிக்கு திருப்பிவிடப்பட்டது. இதற்கு இந்திய விமானப் படை உடனடியாக பொறுப்பேற்றது.

சிவில் விமானநிலையத்திற்கு வந்துசேர சற்று நேரம் பிடித்ததது எனினும், இந்திய விமானப் படை மருத்துவர் ஒருவர் நோயாளியை  உடனடியாக தன்னுடன் பத்திரமாக குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தேவையான அவசர சிசிச்சை அளிக்கப்பட்டு பயணி காப்பாற்றப்பட்டார்.

இப்பயணியின் பெயர் உடனடியாக தெரியவில்லை.

இந்திய விமானப் படைத் தளங்களில் வணிக ரீதியிலான விமானங்கள் அனுமதிக்கப்படுவது அரிதாக உள்ளது. இருப்பினும் பயணியின் உடல்நிலைக்காக கேட்டுக்கொண்டபோது இந்திய விமானப்படை இப்பிரச்சினையில் உடனடியாக உதவியது.”

இவ்வாறு புனீத் சந்தா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மீண்டும் விமானம் புறப்பட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.