அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் இயக்கப்படும் பயணிகள் விமானங்கள், தவறாக அடையாளங் காணப்பட்டு விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னர், 1988ஆம் ஆண்டு ஜூலையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா-ஈரான் படைகளுக்கு இடையே சண்டை மூண்டது. அப்பகுதியில் பறந்துசென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்றை, போர் விமானம் என நினைத்து அமெரிக்க போர்க்கப்பல் இரு ஏவுகணைகளை ஏவித் தாக்கியதில், விமானத்தில் பயணித்த 290 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அமெரிக்கா எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் பறக்கும் பயணிகள் விமானங்கள் தவறாக அடையாளங் காணப்பட்டு விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விமானங்கள் இயக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு, அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை விடுத்த நோட்டீசின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பாரசீக வளைகுடா பகுதி வழியாக விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ், எத்திஹாட், கட்டார் ஏர்வேஸ், ஓமன் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.