அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், இந்தியா விண்வெளி பாதுகாப்புக்கென்று தனி அமைப்பை உருவாக்கியுள்ளது.
இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஏர் வைஸ் மார்ஷல் தர்கார் நியமிக்கப்படவுள்ளார். ஆண்ட்டி சேட்டிலைட் சோதனை நடத்தியதை தொடர்ந்து, நாட்டுக்கென்று தனியாக அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்புக்காக முப்படைகளில் இருந்தும் திறன்வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விண்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் எதிரிகளின் செயற்கைக்கோள்களை அழித்துவிட முடியும் எனவும் இதனால், விண்வெளியிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.