பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை ராணுவ வீரர்கள் சுத்தம்

        அழகியமண்டபத்தில் அழுக்கடைந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர்.
        கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி ஜவான் என்ற முன்னாள் இந்நாள் இராணுவ வீரர்கள் அடங்கிய சங்கம் உள்ளது. இதில் 1882 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பணி செய்யும் ராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை கிடைக்கும் காலகட்டத்தில் சமூக நலன் கொண்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முதல் பணி குழித்துறை பஸ் நிலையம் சுத்தம் செய்தது ஆகும்.
தற்போது அழகியமண்டபம் ஜங்ஷனில் உள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை மிக மோசமாக காணப்பட்டது. இந்த நிழற்குடையை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஜவான் அமைப்பின் நோக்கம். கீரீன் வாயு, கார்பனை ஒழிப்போம், இதயம் மற்றும் குமரியை காப்போம் என்ற உயரிய சிந்தனையில் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இளம் ராணுவ வீரர்களின் இந்த அளப்பரிய பணியை அனைத்திந்திய சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் குமரி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஜார்ஜ் பிலீஜின் மற்றும் வர்த்தகர்கள், ஊர் பிரமுகர்கள், பாதசாரிகள் மட்டுமின்றி பேருந்து பயணிகளும் கண்டு பாராட்டினர். சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் போஸ்டர் ஒட்டி அசுத்தம் செப்வர்கள் ராணுவ வீரர்களை அவமதிப்பது ஆகும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.