பாகிஸ்தானில் 5 நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் மூன்று பேர் தாக்குதல் நடத்தியதால், பெரும் பதற்றம் நிலவியது.

தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குவாதர் நகரிலுள்ள துறைமுகம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் மூன்று தீவிரவாதிகள் 5 நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாவலரை சுட்டுகொன்று உள்ளே சென்றுள்ளனர். இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் பிடையினர் ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகளுக்கு சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜியாவுல்லா லாங்கோவ் தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.