Day: May 19, 2019

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

May 19, 2019

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் இயக்கப்படும் பயணிகள் விமானங்கள், தவறாக அடையாளங் காணப்பட்டு விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர், 1988ஆம் ஆண்டு ஜூலையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா-ஈரான் படைகளுக்கு இடையே சண்டை மூண்டது. அப்பகுதியில் பறந்துசென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்றை, போர் விமானம் என நினைத்து அமெரிக்க போர்க்கப்பல் இரு ஏவுகணைகளை ஏவித் தாக்கியதில், விமானத்தில் பயணித்த 290 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் […]

Read More

எப்.16 விமானங்களை பாதுகாக்க பாகிஸ்தான் வியூகம்

May 19, 2019

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாலகோட்டில் இந்திய விமானப் படையினர் ஜெய்ஷே முகமது தீவிரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி 75 நாட்களுக்கு மேலாகியும், பாகிஸ்தான் தனது எப்.16 விமானங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. சிந்து, பஞ்சாப், சர்கோடா ஆகிய உள்நாட்டு விமானப் படைத்தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த எப்.16 விமானங்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சாட்டிலைட் கண்காணிப்புடன் கூடிய பகுதிகளில் அவை தனித்தனியாக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா மீண்டும் வான் தாக்குதல் நடத்தும் […]

Read More