எப்.16 விமானங்களை பாதுகாக்க பாகிஸ்தான் வியூகம்

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாலகோட்டில் இந்திய விமானப் படையினர் ஜெய்ஷே முகமது தீவிரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி 75 நாட்களுக்கு மேலாகியும், பாகிஸ்தான் தனது எப்.16 விமானங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.
சிந்து, பஞ்சாப், சர்கோடா ஆகிய உள்நாட்டு விமானப் படைத்தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த எப்.16 விமானங்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சாட்டிலைட் கண்காணிப்புடன் கூடிய பகுதிகளில் அவை தனித்தனியாக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மீண்டும் வான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் சேதத்தை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் எல்லையருகே பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராணுவமும் தன் பங்குக்கு பீரங்கிகளையும் ஆயுதப்படையினரையும் எல்லைருகில் முன்னகர்த்தியுள்ளது.பாகிஸ்தானின் படை நகர்வுகளை கண்காணித்து வரும் இந்திய படையினரும் எல்லை அருகே முன்னெச்சரிக்கையாக படைகளை அணி வகுத்துள்ளனர். 
Source: Polimer 

Leave a Reply

Your email address will not be published.