அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எப்.16 போர் விமானம் ஒன்று அங்கிருந்த வணிக வளாக கட்டடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதனால் கட்டடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
அத்துடன் அங்கு தீவிபத்தும் ஏற்பட்டது. ஆனால் விமானி தக்க நேரத்தில் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பினார்.
6 தீயணைப்பு வண்டிகள் மூலம் கட்டடத்தில் பற்றிய தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால் விமானம் மோதிய கட்டடத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற விவரம் வெளியாகவில்லை. பெரிய அளவில் சேதமில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.