மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் வீரமரணம்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள்.

மாவோயிஸ்டுகளின் கொரில்லா தாக்குதல் உத்தியை எதிர்கொள்வதற்காக மகாராஷ்டிரா போலீஸ் புதிய சிறப்பு அணியை உருவாக்கியது. இதில் உள்ளூர் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.

1992-ல் தொடங்கப்பட்ட இந்த அணியில் 60 பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த அணியின் பலம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இவர்களின் செயல்பாடும் அதிகரித்தது.

இவர்களுக்கு பழங்குடிகளின் பண்பாடு, மொழி, தகவல்கள் தெரியும் என்பது மாவோயிஸ்ட் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு உதவியாக அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.