சீனாவில் நடைபெறும் பிரமாண்ட போர்கப்பல் அணிவகுப்பு

சீனாவில் நடக்கவிருக்கும் போர் கப்பல் அணிவகுப்பில் பங்குபெறும் இந்திய கப்பற்படையின் 2 கப்பல்கள் சீனா சென்றடைந்தன.
சீன கப்பற்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை இன்று முதல் வரும் 26ம் தேதி வரை சீனா நடத்த உள்ளது.
தனது கப்பல்படையை பலப்படுத்த புதிய ரக நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட பல புதிய போர் கப்பல்களை இந்த நிகழ்ச்சியில் சீனா அறிமுகப்படத்த உள்ளது.
இதனிடையே இந்த பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பில் இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் 20 போர் கப்பல்களும் பங்கேற்கும் என்று சீனா அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் சார்பில் அதில் பங்கேற்க உள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி கப்பல்கள் அந்நாட்டின் குவிங்டவோ (Qingdao) துறைமுகத்திற்கு சென்றடைந்தன. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.