ஜம்மு காஷ்மீரில் விடுமுறையில் வீட்டில் இருந்த ராணுவ வீரர், தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா சோபோர் ((Warpora Sopore)) பகுதியை சேர்ந்த, ராணுவ வீரர் முகமது ரபீக் யாட்டு ((Mohammad Rafeeq Yatoo)), விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு வெளியில் வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர், விடுமுறையில் வீட்டிற்கு சென்ற போது தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டார்.
ஜூலை மாதம் உமர் பயாஸ் பர்ரே என்ற வீரரும், செப்டம்பர் மாதம் நாயக் முக்தர் அகமது மாலிக் என்ற வீரரும் விடுமுறையில் இருந்த போது தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் விடுமுறையில் செல்லும் ராணுவ வீரர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.