அமெரிக்க பத்திரிக்கைச் செய்தியை அடியோடு மறுத்துள்ள பென்டகன்

இந்தியா தாக்குதல் நடத்தி அழித்த, பாகிஸ்தானின் போர் விமானம் F-16 பத்திரமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட தகவலை, அதே அமெரிக்காவின், ராணுவ தலைமையகமான பென்டகன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட இடங்களில், இந்திய விமானப்படை போர் விமானங்கள், அதிரடி தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன.

இதற்கு பதிலடியாக, இந்திய பரப்பிற்குள் நுழைய முயன்ற, பாகிஸ்தானின் F-16 போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் இதனை மறுத்துவந்த நிலையில், அமெரிக்க பத்திரிக்கை ஒன்று, F-16 போர் விமானம் சுட்டுவீழ்த்தப்படவில்லை என்றது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய விமானப்படை, உண்மையை யாராலும் மறைக்க முடியாது எனக் கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பென்டகன், அமெரிக்க பத்திரிக்கை செய்தியை அடியோடு மறுத்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை கடந்தாண்டே நிறுத்திவிட்ட நிலையில், எந்த ஒரு ஆய்வையும் நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என பென்டகன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.