ஆசிய தடகள போட்டியில் தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப்பதக்கம்

ஆசிய தடகள போட்டியில் தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப்பதக்கம்

ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ், பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் சாதனை படைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சென்னைக்குடி ஊராட்சியை சேர்ந்த அவர் கல்லூரியில் படித்த போதே

கல்லூரிகளுக்கிடைடேயான தடகள போட்டியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். மாநில, தேசிய, ஆசிய அளவிலானவிளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆரோக்கிய ராஜீவ் தற்போது ராணுவத்தில் ஜூனியர் கமாண்டிங் ஆபீசராக பணியாற்றி வருகிறார். 2014 ஆசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள அவர், தென் கொரியாவில் ராணுவ விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்வது மகிழ்ச்சி அளிப்பதாக ஆரோக்கிய ராஜீவின் தாய் தெரிவித்துள்ளார்.

Thanthi tv 

Leave a Reply

Your email address will not be published.