பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை யடுத்து சாலை, ரயில் பாலத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில்,
பாம்பன் பாலத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   ஓம்பிரகாஷ் மீனா  தலைமையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் ஏராளமான போலீசார்  பாம்பன் ரயில் மற்றும்  சாலை பாலங்களில்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாலத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண்ணை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர். சாலை பாலத்தை கடக்கும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள், அரசு பேருந்துகளை தீவிர சோதனைக்கு பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.