புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து காஷ்மீரில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை வேட்டையாட தொடங்கியது.

இப்போது புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் காஷ்மீரில் வேட்டையாடப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டர்கள் முகமது உமர், உஸ்மாயின் இப்ராகிமும் அடங்குவர். இந்த வருடம் மட்டும் காஷ்மீரில் 66 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். 16 பேர் புல்வாமா தாக்குதலை அடுத்து வேட்டையாடப்பட்டவர்கள். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தலைவன்களும் பாதுகாப்பு படையின் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.