Day: April 26, 2019

சென்னையில் உல்பா பயங்கரவாதி கைது

April 26, 2019

#சென்னையில் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது * கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையில் கட்டப்பட்டுவந்த தனியார் மருத்துவமனையில் 6 மாதம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் * தீவிரவாதி பணிபுரிந்து வந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க உள்ளார் * வேறு ஏதேனும் சதிதிட்டம் தீட்டப்பட்டு வந்ததா? என தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை * கைது செய்யப்பட்ட தீவிரவாதி உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தகவல்

Read More

ஆசிய தடகள போட்டியில் தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப்பதக்கம்

April 26, 2019

ஆசிய தடகள போட்டியில் தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப்பதக்கம் ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ், பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழக ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் சாதனை படைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சென்னைக்குடி ஊராட்சியை சேர்ந்த அவர் கல்லூரியில் […]

Read More

தன் உயிரை மாய்த்து இந்தியாவின் விக்ரமாதித்யாவைக் காப்பாற்றிய அதிகாரி!

April 26, 2019

தன் உயிரை மாய்த்து இந்தியாவின் விக்ரமாதித்யாவைக் காப்பாற்றிய அதிகாரி! இந்தியாவிடம் தற்போது ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல்தான் உள்ளது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா. ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இந்தக் கப்பல் ரஷ்யாவிடமிருந்து புனரமைக்கப்பட்டு வாங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் கார்வாரைத் தளமாகக் கொண்டு ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா இயங்கி வருகிறது இந்நிலையில், இன்று கார்வார் துறைமுகத்துக்குள் நுழையும் சமயத்தில் ஐ.என்-எஸ் விக்ரமாதித்யாவின் அடிப்பகுதியில் திடீரென்று தீப் […]

Read More

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

April 26, 2019

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை யடுத்து சாலை, ரயில் பாலத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில்,பாம்பன் பாலத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  […]

Read More

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் – உஷார் நிலையில் காவல்துறை

April 26, 2019

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் – உஷார் நிலையில் காவல்துறை *புதிய நபர்கள் சந்தேகத்திற்குரிய நபர்கள் உங்கள் பார்வையில் பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவும்… *தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும்.ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு பெங்களூர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. *ரயில்வே நிலையம்,மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தலாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

Read More