பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன

பாகிஸ்தானிடம் எஃப்-16 விமானங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அமெரிக்கப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலை இந்திய விமானப்படை நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் எண்ணிக்கையில் குறையாமல் அந்நாட்டு வசம் இருப்பது அமெரிக்காவால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக “ஃபாரின் பாலிசி” என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானம், நடுவானில் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டு விமான தளத்திற்கு திரும்பவில்லை என்பதற்கு போதுமான, நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக விமானப்படை அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் ((Air Vice Marshal R G K Kapoor)) கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.