தீவிரவாதத்துக்கு எதிராக பிரயோகிக்க வழங்கப்பட்ட எஃப்-16 ரக போர் விமானத்தை இந்திய எல்லையில் பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி உள்ளதாக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து எஃப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் அரசு பெற்றுள்ளது. இதனை தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தவிர, வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி, கடந்த வியாழக்கிழமை இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் நடத்தவிருந்த வான்வழித் தாக்குதலில் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை அமெரிக்காவிடம் வழங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.