எல்லை நெடுகிலும் ராணுவத்தை குவிக்கிறது பாகிஸ்தான்

இந்திய எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாலகோட் தாக்குதலை அடுத்து, எப்-16 ரக விமானங்கள் அடங்கிய தனது போர் விமான படை பிரிவுகள் அனைத்தையும் இந்திய எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் நிறுத்தி உள்ளதாக அமெரிக்கா, செயற்கை கோள் படங்கள் மூலம்  உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மகாணத்தில் உள்ள ஐதராபாத் முதல் வடக்கே உள்ள சார்டு வரை அமெரிக்கா மற்றும் ஜோர்டானிடம் பெற்ற விமானங்களை பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளது.
இதே போன்று,  ராவல்பிண்டி மற்றும் சியல்கோட் முகாம்களில் இருந்த ராணுவத்தை எல்லை கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. அத்தோடு ரேடார்கள் மூலமான கண்காணிப்பையும் அந்நாடு தீவிரப்படுத்தி உள்ளது. விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய ராணுவமும் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.