பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய விமானப்படை

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என்பதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இதே நேரத்தில் எப்-16 ரக விமானத்தில் இருந்து பாகிஸ்தான் விமானப்படை ஏவிய அம்ராம் ஏவுகணை அபிநந்தன் சென்ற விமானத்தை தாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.
விமானப்படை விமானிகளில் அபிநந்தன் மட்டுமே எதிரி விமானத்தை மிகசரியாக சுட்டு வீழ்த்தியதாகவும், அவரது குறி தவறவில்லை என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.