உலகில் அதீத ஆபத்து நிறைந்த நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
உலகில் அதீத ஆபத்து நிறைந்த நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதி உதவி அளிக்கும் 23 நாடுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது மட்டுமின்றி, அந்த நாடுகளில் நடைபெறும் சந்தேகத்திற்கு இடமான பண பரிவர்த்தனையும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.