தீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட சிறுவனுக்கு விருது

தீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட சிறுவனுக்கு ஷவுர்ய சக்ரா விருதினை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 2017 ஆம் ஆண்டு தனது தந்தையை கொல்வதற்காக வீட்டிற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த 3 தீவிரவாதிகளை துணிச்சலுடன் எதிர்த்து சண்டையிட்டு  14 வயதே ஆன இர்பான் ரம்ஜான் ஷேக் விரட்டியடித்தான். அவனது வீரத்தை கவுரவிக்கும் வகையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஷவுர்ய சக்ரா விருது வழங்கி குடியரசு தலைவர் தலைவர் கவுரவித்தார்.
அதே போன்று தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி விஜய்குமாருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி விருதை பெற்றுக் கொண்டார். லெப்டினன் ஜெனரல் அனில்குமார் பட்டுக்கு உத்தம் யுத் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.