புல்வாமா பாணியில் மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் – உளவுத்துறை

புல்வாமா பாணியில் மேலும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஜெய்ஷ் தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக மிகவிரைவில் மேலும் ஒரு தீவிரவாத தாக்குதலை அரங்கேற்ற அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு காஷ்மீரின் காசிகுண்ட் ((Qazigund)), அனந்த்நாக் ((Anantnag)) பகுதியில் தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முறை டாடா சுமோ எஸ்யுவி வாகனத்தை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பான உளவுத்தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரும் மிகுந்த உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.