ஜெய்ஸ் முகமது என்ற இயக்கமே இங்கே கிடையாது”- பாக். ராணுவம்

பாகிஸ்தானில் ஜெய்ஷே முகமது என்ற தீவிரவாத அமைப்பு செயல்படவில்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷே முகமதுவை  தடை செய்ய வேண்டும் என்றும் அதன் தலைவர் மசூத் அசாரை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள இந்தியா, இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தங்கள் நாட்டில் ஜெய்ஷே முகமது என்ற இயக்கமே இல்லை என்று தெரிவித்துள்ளார். 
ஆனால், மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனிடையே முன்னாள் அதிபர் முஷாரப் அளித்த பேட்டியொன்றில் கடந்த காலத்திலும் ஜெய்ஷே முகமதுவை இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.