விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதற்கு அண்டைய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து எதிர்மறையான பதில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல், “விண்வெளி என்பது மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரிய பகுதியாகும். இப்பகுதியில் ராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையை ஒவ்வொரு தேசமும் தவிர்ப்பதற்கான பொறுப்பு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் வெற்றிகரமான சோதனை தொடர்பான அறிக்கையை நாங்கள் கவனித்தோம். விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியை நிலைநிறுத்தும் என நம்புகிறோம் என கூறியுள்ளது சீனா. சீனா 2007-ம் ஆண்டு ஜனவரியில் இதுபோன்று விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்திருந்தது.