காஷ்மீரில் ராணுவ வீரர் முகமது யாசின் கடத்தப்படவில்லை; பாதுகாப்பாக தான் உள்ளார்: பாதுகாப்புத்துறை அமைச்சகம்

காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின் ஆவார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டம், சதூரா அருகே உள்ள காஜிபோரா கிராமத்தில் இருந்து ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் விடுப்பில் இருப்பதாக தெரியவந்தது. அவர் கடத்தப்பட்டாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், இன்று காலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ வீரர் முகமது யாசின் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு சென்ற போது, அவரை பயங்கரவாதிகள் சிலர் வீடு புகுந்து துப்பாக்கிமுனையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்றதாக நேற்று தகவல் பரவியது. ஆனால் இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும், இது போன்ற யூகங்களை தயவு செய்து தவிருங்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.