சி.ஆர்.பி.எப்., வீரர்களின் அணிவகுப்பு சென்ற சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய கார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் அணிவகுப்பு வாகனம் கடந்து சென்ற சில நிமிடங்களில் கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹல் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சென்ற பின், கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
விசாரணையில் அந்த காரின் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், தாக்குதல் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக புல்வாமா தாக்குதலை அடுத்து வீரர்களின் அணிவகுப்பு வாகனங்கள் செல்லும் போது, பிறரின் வாகனங்கள் அனுமதிப்பதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.