இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் வீர தீர செயல்கள் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெறவுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரை மேலும் கெளரவப்படுத்தும்விதமாக அவரது வீர தீர சாகச செயல்களை, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்யவுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சரான கோவிந்த் சிங் தோதாஸ்ரா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுடனான மோதலில் இன்னுயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்கள் குறித்தும் அம்மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.