ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நிகழ்த்தியதை அந்த இயக்கம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரர் மவுலானா அமர், பெஷாவர் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்துள்ளார். இந்திய விமான படைகள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகளை வீச வில்லை என்றும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையத்தின் மீது இந்தியா குண்டுகளை வீசி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெறும் நிலத்தில் மட்டுமே இந்தியா குண்டுகளை வீசியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், மசோதா சாரின் இளைய சகோதரர் இந்திய விமானப்படை தாக்குதலை ஒப்புக்கொண்டிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.