மசூத் அசார் விவகாரத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள்

மசூத் அசார் விவகாரத்தில் சீனா தொடர்ந்து தடையாக இருந்தால், வேறு வழிகளை கையாள வேண்டிய நிலைவரும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4ஆவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா கவுன்சில் தூதர்களில் ஒருவர், தீவிரவாதிகளை காப்பாற்ற சீனாவிடம் பாகிஸ்தான் உதவியை நாடுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

Leave a Reply

Your email address will not be published.