பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை பாராட்டி ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையில் மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது பெற்ற மணல்சிற்பி சுதர்சன் பட்நாயக் கைவண்ணத்தில் இந்த மணல் சிற்பம் உருவாகியுள்ளது. தமது மாணவர்களுடன் இணைந்து மூன்று மணி நேரத்தில் இந்த சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார். அபிநந்தனுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக சுதர்சன் பட்நாயக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.