இந்திய நீர்மூழ்கி கப்பல் நடமாட்டம் என பாகிஸ்தான் புகார்

நீர்மூழ்கி கப்பல் தங்கள் கடல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருக்கும் இந்தியா, பழைய வீடியோ பதிவை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் புகார் தெரிவிப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் நடமாட்டம் அடங்கிய வீடியோ பதிவை பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ளது. இந்திய நீர்மூழ்கி கப்பல், தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக குற்றம்சாட்டியது.
இதற்கு பதில் அளித்துள்ள இந்திய பாதுகாப்பு படையினர், 2016ஆம் ஆண்டு வீடியோவை வைத்துக் கொண்டு, தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைப்பதாக கூறியிருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published.