பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாக தகவல்

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 26ஆம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், அந்த இடங்களை, பாகிஸ்தான் அதிகாரிகள், தாக்குதல் எதுவுமே நடக்காதது போல் மாற்ற முயன்றதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, சிலரது சடலங்களை தீயிட்டு எரித்ததாகவும், ஆற்றில் தூக்கி வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published.