Breaking News

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் உள்ள இந்தியா

உலக அளவில் ராணுவ தளவாடப் பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, ஆயுத இறக்குமதியில் உலக அளவில் 12 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது.
9 புள்ளி 5 சதவீத ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 2 புள்ளி 7 சதவீத ஆயுத இறக்குமதியுடன் பாகிஸ்தான் 11வது இடத்திலும் இருக்கிறது.
Advertisement

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் உள்ள இந்தியா
Published : Mar 12, 2019 11:55 AM
உலக அளவில் ராணுவ தளவாடப் பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, ஆயுத இறக்குமதியில் உலக அளவில் 12 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது.
9 புள்ளி 5 சதவீத ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 2 புள்ளி 7 சதவீத ஆயுத இறக்குமதியுடன் பாகிஸ்தான் 11வது இடத்திலும் இருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் வர தாமதம், பிரான்சிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்கள் வழங்க தாமதம் ஆனது போன்ற காரணங்களால்  2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மற்றும் 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது.
2014 – 2018 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து மட்டும் இந்தியா 54 சதவீத ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இது கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசு சீனாவிடம் இருந்து 70 சதவீத ஆயுதங்களையும், அமெரிக்காவிடம் 8 புள்ளி 9 சதவீதமும், ரஷ்யாவிடம்  6 சதவீதம் ஆயுத கொள்முதல் செய்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.